தமிழ்
Surah Al-Waqi'ah ( The Event ) - Aya count 96
إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ
( 1 ) மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
( 2 ) அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
خَافِضَةٌ رَّافِعَةٌ
( 3 ) அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும்.
إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا
( 4 ) பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.
وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا
( 5 ) இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
فَكَانَتْ هَبَاءً مُّنبَثًّا
( 6 ) பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً
( 7 ) (அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.
فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ
( 8 ) (முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ
( 9 ) (இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)
وَالسَّابِقُونَ السَّابِقُونَ
( 10 ) (மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
أُولَٰئِكَ الْمُقَرَّبُونَ
( 11 ) இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
فِي جَنَّاتِ النَّعِيمِ
( 12 ) இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ
( 13 ) முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ
( 14 ) பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ
( 15 ) (பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -
مُّتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ
( 16 ) ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ
( 17 ) நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ
( 18 ) தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
( 19 ) (அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்.
وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ
( 20 ) இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -
وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ
( 21 ) விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
وَحُورٌ عِينٌ
( 22 ) (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ
( 23 ) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).
جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
( 24 ) (இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا
( 25 ) அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.
إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا
( 26 ) 'ஸலாம், ஸலாம்' என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).
وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ
( 27 ) இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)
فِي سِدْرٍ مَّخْضُودٍ
( 28 ) (அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்:
وَطَلْحٍ مَّنضُودٍ
( 29 ) (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடை வாழை மரத்தின் கீழும்:
وَظِلٍّ مَّمْدُودٍ
( 30 ) இன்னும், நீண்ட நிழலிலும்,
وَمَاءٍ مَّسْكُوبٍ
( 31 ) (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,
وَفَاكِهَةٍ كَثِيرَةٍ
( 32 ) ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -
لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ
( 33 ) அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -
وَفُرُشٍ مَّرْفُوعَةٍ
( 34 ) மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).
إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءً
( 35 ) நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி,
فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا
( 36 ) அப்பெண்களைக் கன்னிகளாகவும்,
عُرُبًا أَتْرَابًا
( 37 ) (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
لِّأَصْحَابِ الْيَمِينِ
( 38 ) வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).
ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ
( 39 ) முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,
وَثُلَّةٌ مِّنَ الْآخِرِينَ
( 40 ) பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).
وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ
( 41 ) இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)
فِي سَمُومٍ وَحَمِيمٍ
( 42 ) (அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -
وَظِلٍّ مِّن يَحْمُومٍ
( 43 ) அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.
لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ
( 44 ) (அங்கு) குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை.
إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ
( 45 ) நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.
وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنثِ الْعَظِيمِ
( 46 ) ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.
وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ
( 47 ) மேலும், அவர்கள், "நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ
( 48 ) "அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?" என்றும் கூறினர்.)
قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ
( 49 ) (நபியே!) நீர் கூறும்: "(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ
( 50 ) "குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ
( 51 ) அதற்குப் பின்னர்: "பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ
( 52 ) ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
( 53 ) ஆகவே, "அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள்.
فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ
( 54 ) அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.
فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ
( 55 ) "பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்."
هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ
( 56 ) இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.
نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ
( 57 ) நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
أَفَرَأَيْتُم مَّا تُمْنُونَ
( 58 ) (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
أَأَنتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ
( 59 ) அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
( 60 ) உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
عَلَىٰ أَن نُّبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنشِئَكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ
( 61 ) (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ
( 62 ) முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?
أَفَرَأَيْتُم مَّا تَحْرُثُونَ
( 63 ) (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
أَأَنتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ
( 64 ) அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
( 65 ) நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
إِنَّا لَمُغْرَمُونَ
( 66 ) "நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.
بَلْ نَحْنُ مَحْرُومُونَ
( 67 ) "மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).
أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
( 68 ) அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ
( 69 ) மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
( 70 ) நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ
( 71 ) நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
أَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِئُونَ
( 72 ) அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?
نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِّلْمُقْوِينَ
( 73 ) நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
( 74 ) ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ
( 75 ) நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ
( 76 ) நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான் பிரமாணமாகும்.
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ
( 77 ) நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
فِي كِتَابٍ مَّكْنُونٍ
( 78 ) பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
( 79 ) தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ
( 80 ) அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
أَفَبِهَٰذَا الْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ
( 81 ) அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
( 82 ) நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?
فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ
( 83 ) மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -
وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ
( 84 ) அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ
( 85 ) ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
فَلَوْلَا إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ
( 86 ) எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -
تَرْجِعُونَهَا إِن كُنتُمْ صَادِقِينَ
( 87 ) நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!
فَأَمَّا إِن كَانَ مِنَ الْمُقَرَّبِينَ
( 88 ) (இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.
فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ
( 89 ) அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.
وَأَمَّا إِن كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
( 90 ) அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,
فَسَلَامٌ لَّكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
( 91 ) "வலப்புறத்தோரே! உங்களுக்கு "ஸலாம்" உண்டாவதாக" (என்று கூறப்படும்).
وَأَمَّا إِن كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ
( 92 ) ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்
فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ
( 93 ) கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.
وَتَصْلِيَةُ جَحِيمٍ
( 94 ) நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ
( 95 ) நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
( 96 ) எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.